சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்..!சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான்.
இந்நிலையில் இந்த சாலை தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,அதில் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது .அதேபோல் இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.