நான் ஆட்சியில் இருந்தா புடிச்சி வெட்டி…பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்!
நான் ஆட்சியில் இருந்தால் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை வெட்டிவிடுவேன் என பாமக தலைவர் அன்புமணி திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆவேசமாக பேசியுள்ளார்.

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் பாலியல் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகும்போதெல்லாம் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. எனவே, பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் தெரிவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” தினமும் செய்தித்தாளில் பார்த்து கொண்டு இருக்கிறீர்களா? 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை..இந்த மாதிரி செய்யும் மிருகங்களை என்ன செய்யலாம்? இந்த மாதிரி சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருகிறது. 8 பேர் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். 7 பேர் சேர்ந்து ஒரு கல்லூரிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது பீகார், உத்திர பிரதேஷ் என்று நினைத்தேன். தமிழ்நாட்டில் இப்படி நடக்க முடியாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். பயம் இல்லாத காரணத்தால் தானே இப்படி செய்கிறார்கள். பயம் இல்லை நான் மட்டும் ஆட்சியில் இருந்தேன் என்றால் இப்படி செய்பவர்களை வெட்டிவிடுவேன். எவன் இப்படி செய்தாலும் பரவாயில்லை கூப்பிட்டு இழுத்துவச்சி வெட்டிடுவேன்.
அப்படி செய்தால் தான் அவன் இனிமேல் இப்படி செய்யவே கூடாது என்று நினைப்பான். அப்படி செய்தாலே அவனுக்கு ஐயோ இப்படி செய்தால் வெட்டிவிடுவாங்க இவுங்க என்று பயம் வரும். அந்த பயம் இப்போது இல்லை என்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்த மாதிரி சம்பவங்கள் நடக்க எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பது தான் காரணம். பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பாதுகாப்பாக எங்கும் செல்லமுடியாமல் இருக்கிறார்கள். இதனை சும்மாக நான் வார்த்தைக்காக பேசவில்லை..இதெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு யார் மக்களுக்கு தகுதியானவரோ அவரை தேர்வு செய்யுங்கள்” எனவும் அன்புமணி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025