நான் கூறினால் “சசிகலா ஒழிக” என்று நாளைக்கே ஒரு லட்சம் போஸ்டர்கள் ஓட்டுவார்கள் – அமைச்சர் சிவி சண்முகம்

Default Image

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா? என்று அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள் என்ற நிபுணர் கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், யார் சொன்னது, எவன் சொன்னது என்று கேட்டார். இதற்கு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டி வருகிறார் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர், அவர்தான் அதிமுகவா? பொறுப்பில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கட்சியில் கோடிக்கணக்கான பேர் பொறுப்பில் இருக்கிறார்கள். போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா? சசிகலா ஒழிக என்று ஆயிரம் போஸ்டர் அடித்து ஒட்ட முடியும். நான் கூறினால் சசிகலாவுக்கு எதிராக நாளைக்கே ஒரு லட்சம் போஸ்டர்கள் ஓட்டுவார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, உச்சநீதிமன்ற கால அவகாசம் அளித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநரை சந்தித்து உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்