இதை செய்தால் காலம் முழுக்க அடிமையாக இருப்பேன் – ஆ.ராசா..!

Default Image

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது பேசிய, அவர் வீரவணக்கம் நாள் கொண்டாட திமுகவை தவிர எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு அருகதை இல்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏன் எடுக்க கூடாது என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் முருகன் ஆகியோருக்கு கூறிக்கொள்வது, கடவுளை நம்பாத நான் வேலெடுத்து, அலகு குத்தி, விபூதி பூசி, வீதியில் அலைய தயார். ஆனால் எடப்பாடிபழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் சமஸ்கிருதத்திற்கு பதிலாக கந்தசஷ்டிகவசம் சொல்லி வழிபாடு நடத்த வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஆ.ராசா புயல் நிவாரணமாக கேட்கப்பட்ட 14 ஆயிரம் கோடியில் மீதமுள்ள 11 கோடியை தமிழகத்திற்கு மூன்று மாதத்திற்கு வாங்கி கொடுத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலம் முழுக்க அடிமையாக இருப்பேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்