நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசியல்வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் இடை தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து கட்சி தேர்தல் பிரசாரமும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்ட வடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் ஒரு பைசா ஊழல், லஞ்சம் இருந்தாலும் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என்றும், நாட்டின் முதல் மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவம், கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க நாம் தமிழர் கட்சி வழிவகை செய்யும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, ‘ஜெயலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்பல்லோ மருத்துவமனை செல்கிறார், அதே போல் கருணாநிதி காவேரி மருத்துவமனை செல்கிறார். அப்போது அரசு மருத்துவமனையின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும். அந்த அளவிற்கு அரசு மருத்துவமனையில் தரம் இல்லை’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசியல்வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சட்டம் கொண்டு வருவோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…