இன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் சரத்குமார் பேச்சு.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சி தலைவர் சரத்குமார், நம் இயக்கம் எதை நோக்கி செல்ல வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், உங்கள் தலைவர் நாட்டாமை முதல்வராக அரியணை ஏற வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர்.
அது சாத்தியமா என்பது 2026-ஆம் ஆண்டு தேர்தலின்போது தெரிய வரும். இது நிறைவேற வேண்டும் என்றால், முயற்ச்சி, நேர்மை மற்றும் உடல் வலிமை மனவலிமை இருப்பது அவசியம். 2025ல் மனிதவளம் மற்றும் அதிக இளைஞர்கள் கொண்ட நாடக நம் நாடு இருக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால், இன்றும் 25 வயது இளைஞனை போல் இருக்கிறேன்.
இன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். அந்த ரகசியத்தை 2026-ஆம் ஆண்டு என்னை முதலமைச்சராக ஆக்கினால், அப்போது அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன் என்றார். மேலும், தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும், தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும்.
இதன்பின் தானாகவே மதுகடைகள் மூடப்பட்டுவிடும். பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன், அவர்கள் கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் மன உளைச்சலுக்காக சிலர் குடிக்கின்றனர், அது மன உளைச்சலை இரட்டிப்பாக்கிவிடும் எனவும் தெரிவித்தார். மதுக்கடையை மூட ஆர்பாட்டம் செய்வதால் பலனில்லை. கடைக்கு போகாமலிருந்தாலே சரியாகிவிடும் என்றார்.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…