இந்தி ஆதிக்கம் வேர்கொண்டால் அடி முதல் நுனி வரை வேரோடு வேராய் சாய்ப்போம் – வைகோ!
பா.ஜ.க. அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முற்பட்டால் அதனை வேரோடு வேராய் மண்ணோடு மண்ணாய்ப் சாய்ப்போம் என மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரும் தலைவருமாகிய வைகோ அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில் அண்மைக்காலமாகவே இந்தி பயிற்று மொழியாக்க பட வேண்டும்எனவும், பொது இடங்களில் தமிழுக்கு பதிலாக இந்தி இருப்பது தவறு எனவும் சர்ச்சைகளுடன் கூடிய வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று கூட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமான நிலையம் சென்று இருந்த பொழுது கொரோனா பற்றி பெண் அதிகாரி ஒருவர் இந்தியில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது கனிமொழி ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என கூறியதற்கு, அவர் நீங்கள் இந்தியரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்வு சாதாரணமாக விடக்கூடியது அல்ல இந்தியர்கள் இந்தி மொழி பேச வேண்டும் என்று தீர்ப்பு எப்போது வந்தது என கனிமொழி கூறி இருந்தார். இந்நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதையும், இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்ப்பது பன்முகத்தன்மைதான் என்பதையும் உணராமல், பா.ஜ.க. அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முற்பட்டால் அதனை வேரோடு வேராய் மண்ணோடு மண்ணாய்ப் சாய்ப்போம் என மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரும் தலைவருமாகிய வைகோ அவர்கள் கூறியுள்ளார்.