இவரு அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறி விடும் – சீமான்
அதிமுக பாஜக காலடியில் நிற்காது, பாஜக தான் மற்றவர்கள் காலடியில் நிற்கும் என்று சீமான் பேட்டி.
2017-ல் சேலம் பொது கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமானிடம், உதயநிதி அமைச்சரானால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி முதலமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக பாஜக ஆளுமைக்குள் இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதிமுக பாஜக காலடியில் நிற்காது, பாஜக தான் மற்றவர்கள் காலடியில் நிற்கும் என்றும், நாட்டிலேயே பெரிய கட்சி எனக் கூறப்படும் பாஜக ஏன் தேர்தலில் தனியாக போட்டியிட முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாதமொரு முறை மின்கட்டணம் எனக் கூறிய அரசு தற்போது ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை? ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.