வாய்ப்பளித்தால் நாங்களும் விக்கெட் எடுப்போம்…! கிரிக்கெட் வீரர் நடராஜனை எடுத்துக்காட்டாக கூறிய சரத்குமார்…!
எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், எங்களாலும் பல விக்கெட்டுகளை எடுக்க முடியும்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அழகரை ஆதரித்து, சரத்குமார் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கிரிக்கெட் வீரர் நடராஜனை எடுத்துக்காட்டாக கூறி பேசினார்.
அவர் பேசுகையில், கூகுளில் தேடி பாருங்கள், நடராஜன் என்று போட்டவுடன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்று வருகிறது. இதற்கு காரணம் என்ன? அவருக்கு வாய்ப்பு கிடைத்தது பயன்படுத்திக் கொண்டார். திறமையை வெளிப்படுத்தி பல விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், எங்களாலும் பல விக்கெட்டுகளை எடுக்க முடியும். ஒத்த கருத்துடையவர் ஒருங்கிணைந்து நிற்கிறோம். அதனால் தான், வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறேன் என்றும், நான் கட்சியை தொடங்குவதற்கு முன்பதாகவே, எம்.ஜி.ஆருடன் பயணித்தவன் என்று கூறியுள்ளார்.