சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பரப்பினால் நடவடிக்கை..! கோவை ஆட்சியர் அதிரடி..!
கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என கோவை ஆட்சியர் பேட்டி.
கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனையடுத்து, கோவை ஆட்சியர் சமீரன் அவர்கள், கோவையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைதியை நிலைநாட்ட இருதரப்பு அமைப்புகளுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என பேட்டியளித்துள்ளார்.