அதிமுகவை ஈபிஎஸ் தொடர்ந்து வழிநடத்தினால் கட்சி அழிந்துவிடும் – பண்ருட்டி ராமச்சந்திரன்
எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வழிநடத்த முடியவில்லை பண்ரூட்டி ராமசந்திரன் பேட்டி.
அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறுகையில், எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்று அடிப்படையில் மரியாதையை நிமித்தமாகவே அண்ணன் மண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தேன் என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள், நான் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வழிநடத்த முடியவில்லை. அவரை மக்கள் ஏற்கவில்லை. அதிமுகவை ஈபிஎஸ் தொடர்ந்து வழிநடத்தினால் கட்சி அழிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.