தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க,போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக, அரவிந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.அதன்படி,பள்ளி ஆசிரியர்,மாணவர்,பெற்றோரை கொண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைத்து,தொடர்ச்சியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.மேலும்,மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்களா? என்ற அறிகுறிகளை கண்டறியும் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம்.
அதன்பின்னர்,அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.அதே சமயம்,மாணவர்களுக்கு போதைபொருள் யார் மூலம் கிடைத்தது என்பதைக் கண்டறிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…