தனித்து போட்டியிடலாம் என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் செல்லூர் ராஜூ, எல்லா கட்சியும் தனித்து நிற்கட்டும். யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். திமுக, தேர்லில் தனித்து நிற்கப் போவதாக சொல்கிறார்கள். ஏன் அதிமுகவும் தனித்து நிற்க கூடாது என எடப்பாடி பழனிசாமி யிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். திமுக தேர்தலில் தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க தயார் என்றும் எல்லா கட்சியும் தனித்து நின்றால் யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக வலுவாக இருப்பதை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார். அதனால்தான் அதிமுக உடைந்து விட்டது என அவர் பேசுகிறார். திமுக பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி போல தனது நிலைமை உள்ளது என கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மனம் வெதும்பி பேசியுள்ளார். தனது நிர்வாக திறன் குறைபாட்டை கூறுகிறாரா?, கட்சியின் நிர்வாகிகளை குறிப்பிடுகிறாரா? என தெரியாத அளவிற்கு பயத்துடன் பேசியுள்ளார் என விமர்சித்திருந்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…