திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது – அன்புமணி ராமதாஸ்

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பே இருக்காது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தனை ஆதரித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எந்த பிரச்னையும் இல்லாமல் முதல்வர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பே இருக்காது. திமுக ஆட்சியில் பெண்கள் சாலையில் கூட நடக்க முடியாது. இதெல்லாம் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக என்றாலே அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் இதனை எல்லாம் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
10 ஆண்டு காலம் ஆட்சிக்கு வர முடியாமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் எல்லாத்தையும் சுருட்டி கொண்டு சென்றுவிடுவார்கள். இதனால் மக்கள் யோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஒரு விவசாயி ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் கொள்கை, சமூக நீதி என்றால் என்னவென்று தெரியுமா? என்றும் உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025