Annamalai : அதிமுக கட்சி டிடிவி.தினகரனிடம் இருந்தால் ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால். தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசுகையில், “மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அம்மையார் இங்கு நடப்பதை எல்லாம் மேலிருந்து ஆண்டவனோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அதிமுக கட்சி என்றாலே அது ஒரு ஒப்பந்தக்காரர்களுக்கான கட்சி என்று மாறிவிட்டது. ஒப்பந்தக்காரர்களுக்கு எனவே அதிமுக கட்சியை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாரைவார்த்து விட்டார். மேலும், அவர் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்.
அதிமுக தொண்டர்களில் இருக்கும் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கமே உள்ளனர். இந்த தேர்தல் முடிந்த பிறகு அதிமுக கட்சி டி.டி.வி தினகரனின் கைவசம் ஆகும். அதே போல் டி.டி.வி தினகரன் கையில் அதிமுக கட்சி சென்றிருந்தால் இன்றைக்கு முக.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்திருக்க மாட்டார்”, என்று தேனியில் திவர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…