குடியுரிமை வழங்கவில்லை என்றால் நாங்கள் குடியேற கைலாசம் காத்திருக்கிறது.! சீமான் நக்கல் பேச்சு.!
- இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒரே நாடாக இருக்காது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- தங்களுக்கு இங்கு குடியுரிமை வழங்க வில்லை என்றால் தாங்கள் குடியேற கைலாசம் காத்திருப்பதாக சிரித்துக்கொண்டே கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நாட்டிற்குள் யார் வரலாம், யார் வரக்கூடாது என்று பேசுவது பைத்தியக்காரத்தனம் என்றும், திருவள்ளுவரையே மாற்றியவர்கள் இவர்கள்தான் என்றும் விமர்சித்தார்.
மேலும், தங்களுக்கு இங்கு குடியுரிமை வழங்க வில்லை என்றால் தாங்கள் குடியேற கைலாசம் காத்திருப்பதாக சிரித்துக்கொண்டே கூறினார். இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க உறுதுணையாக இருந்த திமுக, இன்று அவர்களுக்கு போராடுவது போல் நாடகமாடுவதாகவும், என தெரிய வருகிறது என்று சீமான் குற்றம்சாட்டினார்.