திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அண்ணாமலை அறிக்கை.
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள், ‘கனகசபை மீது வெள்ளியாட்கள் பக்தர்கள் ஏறக்கூடாது’ என பதாகை வைத்துள்ளனர். இந்த பதாகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டு உள்ளனர். ஆனால் அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் யாருமே ஏறக்கூடாது என்று வைக்கப்பட்ட பதாகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதன் காரணமாக கனகசபையை பூட்டி தீட்சிதர்கள் போராட்டம் நடத்தினர்.
தீட்சிதர்கள் சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தினை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்பது போல், தீட்சிதர்கள் செய்லபட்டு வருகிறார்கள். மேலும் தேவையான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…