சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்! நாங்குநேரி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜிவி!
நாங்குநேரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் சின்னத்துரை. இவர் சின்னத்துரைவுடன் படித்து வந்த சில மானவர்கள் சின்னத்துரையை அடிப்பதும், தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து நிகழும் தன் மீதான ஒடுக்குமுறை காரணமாக அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமலே இருந்துள்ளார். பிறகு 1 வாரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு அந்த மாணவன் சென்றபோது ஆசிரியர் எதற்காக 1 வாரம் பள்ளிக்கு வரவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சின்னத்துரை, தனது ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆசிரியர் சின்னதுரையை துன்புறுத்திய அந்த சக மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி இருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த மாணவர்கள் நேற்று இரவு வீடுபுகுந்து சின்னத்துரையை சரமாரியாக வெட்டியுளள்ளார்கள். தடுக்கவந்த அவருடைய தங்கையையும் அந்த மாணவர்கள் வெட்டியுள்ளார்கள். இருவரும் படுகாயம் அடைந்து தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும். இந்த வழக்கில், 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் ” தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன் சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்???? சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்
— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2023