தமிழகத்தின் மாநில நீதி கிடைக்கக்கூடிய உரிமைகள் பறிக்கப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி என்னும் நான்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நூலை வெளியிட. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பெரியார், அண்ணா, கருணாநிதி மாடல்களின் கலவையாக தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜகவினர் கருணாநிதியை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறி ஒப்புதல் வழங்கியுள்ளனர். இது முதல்வருக்கு கிடைத்த பாராட்டு தான் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் முத்துவேல் கருணாநிதி என்னும் நான் என்ற நூலில் கலைஞரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்வி மற்றும் பதில்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முக்கியமான கேள்வியாக திமுகவின் போர் அடையாளமான போர்க்குண எதிர் அரசியலை இப்போது பார்க்க முடியவில்லை. இது தலைமுறை மாற்றத்தின் விளைவா? அல்லது காலமுறை ஓட்டத்தின் சிதைபா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலோ, தமிழகத்தின் மாநில நீதி கிடைக்கக்கூடிய உரிமைகள் பறிக்கப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…