கர்நாடக பா.ஜ.க.விற்கு 40 சதவிகித கமிஷன் ஆட்சி என்று பலத்த குற்றச்சாட்டு இருக்கிற நிலையில் இத்தகைய ஊழலில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே சிக்கியிருக்கிறார் என கே.எஸ்.அழகிரி ட்வீட்
கர்நாடக மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் கர்நாடக பொதுத்துறை நிறுவனத்தின் தலைவருமான மாடால் விருப்பாசப்பா வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனையிட்டபோது அவரது மகன் பிரசாந்த் ரூ.41லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லோக் ஆயுக்தா ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, கர்நாடக பா.ஜ.க.விற்கு 40 சதவிகித கமிஷன் ஆட்சி என்று பலத்த குற்றச்சாட்டு இருக்கிற நிலையில் இத்தகைய ஊழலில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே சிக்கியிருக்கிறார். இது கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.
முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ2400 கோடி அளவிற்கு மோசடி செய்த கே.ஹரிஷ் என்பவரை பாஜகவில் சேர்த்து பதவி கொடுத்து பாதுகாப்பதில் அண்ணாமலையும், விளையாட்டுத்துறை தலைவர் எஸ். அமர்பிரசாத் ரெட்டியும் இணைந்து செயல்பட்டதில் பின்னணியாக வெளிவருகிற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன.
மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பாஜக தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது? ஏன் பாதுகாக்கிறது? மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட கே.ஹரிஷ்க்கும், தமிழக பாஜக தலைமைக்கும் உள்ள உறவு குறித்து விளக்க வேண்டிய பொறுப்பு அண்ணாமலைக்கு இருக்கிறது. இதற்கான உரிய விளக்கத்தை அவர் வெளியிடுவாரா ?
மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…