புதுக்கோட்டையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வந்தால் தான் சென்னைக்கு புறப்படுவேன் …!அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
புதுக்கோட்டையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வந்தால் தான் சென்னைக்கு புறப்படுவேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 95% மீட்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்பதை உறுதிசெய்த பின்பு தான் சென்னைக்கு புறப்படுவேன்
என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.