அரசு அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையும் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் முறையாக அனுமதியின்றி சிலைகளை வைக்க அதிகாரிகளும் அனுமதிக்கக்கூடாது என்றும் அனுமதியின்றி சிலைகள் வைக்கப்பட்டால் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறும் வரை சிலையை திறப்பதோ, மரியாதை செய்வதோ கூடாது என விருதுநகரில் இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுமதியின்றி சிலை வைப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் போலீசார் சிரமத்துக்குள்ளாகின்றனர். முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்கவில்லை என்றும் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவே அறிவுறுத்தப்படகாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.