பொது இடங்களில் சிலை வைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்தது.
உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில சிலைவைக்க அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல், சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
அரசு நிலம், நீர்நிலை, சாலையை ஆக்கிரமிக்காமல் சிலை அமைக்கப்படுகிறதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலையில் அனுமதியின்றி வைத்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை அகற்ற கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுவில், கோவை அவினாசி சாலையில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இது குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…