சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான ஐடியாஸ்2ஐடி(Ideas2IT) என்ற நிறுவனம்,10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக அளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக,நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைவர்,ஹரி சுப்ரமணியன் கூறுகையில்:”10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்குகிறோம்.எங்களிடம் 500 பணியாளர்கள் உள்ளனர். நாங்கள் பெற்ற செல்வத்தை ஊழியர்களுக்கு திருப்பித் தருவதே எங்கள் எண்ணமாக உள்ளது”,என்று கூறினார்.
மேலும்,இது தொடர்பாக பரிசு பெற்ற ஊழியர் ஒருவர் கூறுகையில்: “நிறுவனத்திடமிருந்து பரிசுகளைப் பெறுவது எப்போதுமே பெரிய விஷயம்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனம் தங்க நாணயங்கள், ஐபோன்கள் போன்ற பரிசுகளுடன் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.கார் எங்களுக்கு மிகவும் பெரிய விஷயம்,” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில்,சென்னையை தளமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவனம்,தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து நிர்வாகிகளுக்கு தலா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 5 புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…
சென்னை : இன்றயை கால இளைஞர்கள் மத்தியில் எந்த மாதிரி படத்தினை இயக்கி நடித்தால் க்ளிக் ஆகும் என பிரதீப்…
துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு…
சென்னை : நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார்.…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…