#wow:100 ஊழியர்களுக்கு “100 கார்கள்” பரிசு – அசத்திய ஐடி நிறுவனம்!

Default Image

சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான ஐடியாஸ்2ஐடி(Ideas2IT) என்ற  நிறுவனம்,10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக அளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக,நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைவர்,ஹரி சுப்ரமணியன் கூறுகையில்:”10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்குகிறோம்.எங்களிடம் 500 பணியாளர்கள் உள்ளனர். நாங்கள் பெற்ற செல்வத்தை ஊழியர்களுக்கு திருப்பித் தருவதே எங்கள் எண்ணமாக உள்ளது”,என்று கூறினார்.

மேலும்,இது தொடர்பாக பரிசு பெற்ற ஊழியர் ஒருவர் கூறுகையில்: “நிறுவனத்திடமிருந்து பரிசுகளைப் பெறுவது எப்போதுமே பெரிய விஷயம்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனம் தங்க நாணயங்கள், ஐபோன்கள் போன்ற பரிசுகளுடன் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.கார் எங்களுக்கு மிகவும் பெரிய விஷயம்,” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில்,சென்னையை தளமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவனம்,தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து நிர்வாகிகளுக்கு தலா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 5 புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMK VS BJP LIVE
Dragon - Blockbuster
Afghanistan vs South Champions Trophy 2025
Udhayanidhi Stalin - LanguagePolicy
mk stalin Dharmendra Pradhan
chagal cricket player wife DIVORCE
Rashid Khan ibrahim zadran