25 கோடி வாடிக்கையாளர்களின் 2ஜி செல்போன் இணைப்புகள் இன்னும் சில வாரங்களில் துண்டிக்கப்படும் என்று வோடாபோன்,ஐடியா,ஏர்டெல் போன்று நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த துண்டிப்பு நடவடிக்கை எதுக்கு என்று கேட்கும் வாடிக்கையாளர்க்கு பதில் ஒன்றையும் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 2ஜி செல்போனில் மாதத்திற்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்வோரின் செல்பேசி எண் இனி வருங்காலத்தில் செயலிழந்துவிடும் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சுமார் ஏர்டெல்லுக்கு 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 15 கோடி வாடிக்கையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்து என்று கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் சேவையை நிறுத்திக் கொள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக முடிவெடுத்துள்ளது. ஏனெனில் இரண்டு சிம்கார்டுகளுடன் கூடிய செல்போன்களை வைத்திருப்பவர்கள், தங்களிடம் உள்ள 2ஜி எண்ணுக்கு ரீசார்ஜ் என்பதே செய்வதில்லை மேலும் ரீசார்ஜ் செய்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…