தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் கண்ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
அருங்காட்சியக இயக்குநராக இருந்த கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சமூகநலத்துறை செயலாளராக இருந்த மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
மைதானத்தில் காலில் விழுந்த ரசிகர்! விராட் கோலியின் நெகிழ்ச்சி செயல்.! வைரலாகும் வீடியோ இதோ…
March 23, 2025
ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
March 23, 2025