ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.., கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம்..!
தமிழக அரசின் கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில்இன்று சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து புதிய துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா துறை கூடுதல் தலைமைச் செயலரான விக்ரம் கபூர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தொழில் துறை ஆணையராக சிஜிதாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனராக பங்கஜ்குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.