“நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்திற்கு ஊதியத்தை வழங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!
“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவிப்பு.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார். தனியார் அமைப்புகள் மற்றும் நபர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசும் இணைந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்தை முதலமைச்சர் வைத்தார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல் நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 கோடி ரூபாய் நிதி வழங்கினார். அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக IAS அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, தமிழ்நாடு IAS அதிகாரிகள் சங்கம், ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டத்திற்கு மார்ச் மாதத்திலிருந்து தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குகிறது.