#Breaking:சென்னை:மழை,வெள்ள பாதிப்பை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

Default Image

சென்னையில் மழை,வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள வீடுகள் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் தேங்கி காட்சியளிக்கிறது.கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் ஈவிஆர் சாலை, சுங்குரெட்டி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. மேட்லி சுரங்க பாதை, கணேஷபுரம் சுரங்க பாதை உள்ளிட்ட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,சென்னை கொளத்தூரில் மழை பாதிப்புகளை பார்வையிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.பின்னர்,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்,’மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தார்.

இதனையடுத்து,சென்னையில் அடையாறு, திருவான்மியூர், பட்டினம்பாக்கம், மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் கண்கானிக்கவும் ,மேற்வார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தவும் 15 மண்டலங்களுக்கு 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அதன்படி,கமல் கிஷோர், கணேசன், சந்தீப் நந்தூரி, டி.ஜி.வினய் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரிப்பன் மாளிகையில் இன்று மாலை நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.சென்னை மழை பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து ரிப்பன் மாளிகையில் நடக்க உள்ள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்