ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 11 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண் இயக்குனராக ரீட்டா ஹரிஷ் தாகூர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வேளாண்துறை கூடுதல் இயக்குனராக ஜெ.விஜயராணி நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக இணை ஆணையராக கே.கற்பகத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.