IAS தேர்வில் "தூத்துக்குடி துப்பாக்கி சூடு"தேர்வில் இடம்பெற்ற தூத்துக்குடி…!!!
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த கேள்வி இடம்பெற்றது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நேற்று மத்திய அரசுப் பணியாளர்களுக்கான நெறிமுறைகள் குறித்த தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பெண்கள் இயக்கம், நீர் மேலாண்மை குறித்த பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 11வது கேள்வியாக, “சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக பல்வேறு மாநிலங்களால் மறுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் தொழிற்சாலை, ஒரு மாநில அரசின் அனுமதியோடு , ஒரு நகரத்திற்கு அருகிலேயே துவங்கப்படுகிறது. 10வருடங்களுக்கு மேலாகச் செயல்பட்டு வரும், அந்த ஆலையின் செயல்பாடுகளால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் மற்றும் நிலத்தடி நீர் உள்ளிட்டவை பாதிக்கப்படுகிறது.
இதனால், அப்பகுதி மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பல்வேறு வகையான பாதிப்புகள் உண்டானது. இந்தப் பாதிப்புகள் பெரிய அளவில் இருந்தது. அதனால் கோபமடைந்த மக்கள், அந்த ஆலையை எதிர்த்துப் போராட்டம் நடத்த தொடங்குகின்றனர். இறுதியில் அந்தப் போராட்டத்தால் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவே, காவல்துறை போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகிறது.
DINASUVADU