மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – தேமுதிக தலைவர், விஜயகாந்த்

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்.
எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 27 சதவீதமும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
நீண்ட சட்ட போராட்டம், அரசியல் கட்சிகள், மாணவர் தரப்பு கொடுத்த அழுத்தம் போன்றவை இதற்கு காரணம் என கருதப்படுகிறது. இதனை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். அந்தவகையில், தற்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும், அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும், அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.#OBCReservation @PMOIndia @CMOTamilnadu pic.twitter.com/RPQCZFg8QI
— Vijayakant (@iVijayakant) July 31, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025