நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன் – நடிகர் விஷால்
நடிகர் விஷால் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நெருங்கிய நண்பர்கள என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால் தனது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். மேலும், அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து, அவர்களின் ஆசீர்வாதம் பெறுவது மட்டுமே மனம் நிம்மதியா இருக்கும். என்னால் முடிந்த வரைக்கும் உதவிகளை செய்து வருகிறேன் என்றார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரை வாழ்த்துவேன் என்று விஜயின் அரசியல் நடவடிக்கை குறித்த கேள்விக்கு இவ்வாறு கூறினார்.
மேலும், 4 பேர் அமர்ந்துகொண்டு விருத்தாளர்களை தேர்வு செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது என தேசிய விருது குறித்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்தார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு, 45 ஆண்டுகளுக்கு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் பட்டம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் மக்களை மகிழ்வித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் திரையில் படைத்து வருகிறார், இது எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என பதிலளித்தார்.