முதல்வர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தினந்தோறும் தலைமை செயலகம் சென்று  அலுவல்களை கவனித்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் கட்சியினரை சந்திப்பது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிசியாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கள ஆய்வில் முதல்வர் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசின் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அந்த சமயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக முதல்வர் அரசு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், முதலமைச்சர் முக ஸ்டாலின், விரைவில் உடலநலம் தேறி அரசு பணியில் ஈடுபட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago