முதல்வர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – அண்ணாமலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தினந்தோறும் தலைமை செயலகம் சென்று அலுவல்களை கவனித்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் கட்சியினரை சந்திப்பது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிசியாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கள ஆய்வில் முதல்வர் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசின் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அந்த சமயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக முதல்வர் அரசு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், முதலமைச்சர் முக ஸ்டாலின், விரைவில் உடலநலம் தேறி அரசு பணியில் ஈடுபட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.