வெங்கையா நாயுடு கொரோனாவிலிருந்து விரைவாக மீண்டு வர விரும்புகிறேன் – மு.க.ஸ்டாலின்
வெங்கையா நாயுடு கொரோனாவிலிருந்து விரைவாக மீண்டு வர விரும்புகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயேதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மாண்புமிகு வெங்கையா நாயுடு கொரோனாவிலிருந்து விரைவாக மீண்டு நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
I wish Hon’ble @MVenkaiahNaidu a speedy recovery from #COVID19 and safe return to good health
— M.K.Stalin (@mkstalin) September 29, 2020