மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என ரோஜா பேட்டி.
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சர் ரோஜா அவர்கள் இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் சூழ்ந்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சாமி தரிசனத்திற்கு பின்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆந்திராவில் தன்னை சுற்றுலா விளையாட்டு, கலாச்சாரத் துறை அமைச்சராக நியமித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாமியார் வீடான தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நான் அமைச்சராக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இதனால் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்டுதோறும் காமாட்சி அம்மனை வந்து தரிசனம் செய்வது வழக்கம். தனக்காக யார் யார் வேண்டிக்கொண்டார்களோ, அவர்களுக்கெல்லாம் மறுபடியும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…