ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன் – அமைச்சர் செல்லூர் ராஜூ
என் மீதான ஊழல் புகார்கள் ஆதாரத்துடன் நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகத் தயாராக உள்ளேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, ஆதாரம் இருந்தால் வெளியிட சொல்லுங்கள், என் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் பொது வாழக்கையில் இருந்து விலகிக் கொள்ள தயார் என்றும் சட்டமன்ற தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
எனது துறையில் எந்த இடத்திலும் நான் முறைகேடு ஊழல் செய்ததில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். பொதுவாழ்க்கையில் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் ஒரு முன்உதாரணமாக இருப்பதாக கருதுகிறேன். நான் பந்தா, பவுசு எல்லாம் செய்தது கிடையாது. ரெட் லைட் காரில் செல்லும் போது நான் ஒரு அமைச்சர், மற்ற வகையில் நானும் மக்களோடு மக்கள், தொண்டர்களுடன் தொண்டராகத்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.