பாஜகவில் குஷ்பு இணைந்தால் வரவேற்பேன் – எல்.முருகன்

பாஜகவில் குஷ்பு இணைந்தால் வரவேற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் குஷ்பு.
இதனிடையே குஷ்பு பாஜகவில் இணைய உள்ள தகவல் வெளியாகி வருகிறது.இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில், பாஜகவில் குஷ்பு இணைந்தால் வரவேற்பேன். பாஜகவுக்கு யார் வந்தாலும் மனதார வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.