அதிமுக கொடி தான்…  எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்..! ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி.! 

Edappadi Palanisamy - O Panneerselvam - Pugazhendhi

அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து நீதிமன்ற உத்தரவை பெற்றார்கள். அன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை தனது வாகனத்தில் பொருத்தவில்லை. மேலும் , அதிமுக பெயர் பதியப்பட்ட லெட்டர் பேட் பயன்படுத்தவில்லை.

ஆனால், ஓபன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்னும் அதிமுக கொடியை தனது வாகனத்தில் பயன்படுத்தி வருகிறார். இது குறித்து இன்று கோவையில் புகழேந்தி  செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை அதிமுக கொடி பயன்படுத்த கூடாது என எவன் சொன்னாலும் கேட்க மாட்டேன். அதற்காக சிறை செல்லவும் தயங்கமாட்டேன்.

நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!.

அதிமுக கொடி பயன்படுத்த கூடாது என ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிட்டு தான் நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதில் எனது பெயர் இல்லை.  அவர் அம்மா (ஜெயலலிதா) வழியில் வந்தவர் அமைதியான மனிதர். நீதிமன்ற உத்தரவை அமைதியாக பின்பற்றுபவர். அன்று (கடந்த அதிமுக ஆட்சியில்) அவர் (ஓபிஎஸ்) தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் என அங்கீகரித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் துணைநின்று ஆட்சியை காப்பாற்றினார். ஆனால் அவரையே அதிமுக கொடி [பயன்படுத்த கூடாது என நீதிமன்ற உத்தரவு வாங்குகிறார்கள் என புகழேந்தி விமர்சித்தார்.

பூத் கமிட்டி அதிமுக பெயரில் தான் நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி தவறான சான்றிதழை சமரிப்பித்து வருகிறார். தற்போதும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களும் தோல்வியே கண்டுள்ளன. அதிமுக வளர்ச்சியில அக்கறை கொள்ளாத வகையில் இபிஎஸ் இருக்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்