கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன், அப்படி கூறுவதால் என் உயிர் போகும் என்றால் போகட்டும், சமுதாயத்திற்காக என் உயிர் போகட்டும். இந்திய அளவில் மோடி அரசு டெபாசிட் இழக்கும்.
இன்று நடிகரும் , சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது , MGR நூற்றாண்டு விழா வந்த போது சாலையின் இரு ஓரங்களிலும் எவளோ பேனர் வைத்தார்கள்.மக்களுக்கும் , போக்குவரத்துக்கும் இடைஞ்சல் உண்டாவதை போல இவளோ அட்டூழியம் செய்தார்கள்.நான் கண்டித்து ஒரு வால்போஸ்டர் ஓட்டினாலே காவல்துறையை வைத்து வழக்கு பதிவு செய்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் ஆட்சி முறைகளை நீதிபதிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.கண்டிப்பாக ஒருநாள் தக்க பதிலடி கொடுப்பாங்க என்றார்.
இவர்கள் ஆட்சியில் மக்களுக்கு ஒரு சட்டம் , ஆட்சியாளர்களுக்கு ஒரு சட்டம்.அனைத்து மக்களும் இவர்களையும் , அமைச்சர்களையும் பார்த்து சிரிக்கிறார்கள். நான் லொடுக்கு பாண்டி தான் ஆனால் நான் கீழிருந்து வந்தவன் கிளையில் இருந்து போராடி ஒரு அமைப்பு மூலமாக அம்மாவின் ஒத்துழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.நான் ஒரு போராளி ,அமைச்சர்களாக இருந்தாலும் வார்த்தைகள் முக்கியம்.இனிமேல் என்னுடைய மூக்குலத்தோர் சமுதாய இளைஞர்களின் கையை உடைப்பேன் , காலை உடைப்பேன் என்றால் அதற்க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன் ஆனால் இவர்களின் ஆட்சியில் வலியவருக்கு ஒரு சட்டம் , எளியவருக்கு ஒரு சட்டமாக உள்ளது.கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன், அப்படி கூறுவதால் என் உயிர் போகும் என்றால் போகட்டும், சமுதாயத்திற்காக என் உயிர் போகட்டும். இந்திய அளவில் மோடி அரசு டெபாசிட் இழக்கும் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
நடிகர் கருணாஸ் முதல்வரை அடிப்பேன் என்றும் மற்ற சமுதாயத்தை பேசியது குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடதக்கது .
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…