மக்கள் நீதி மய்யம் போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் நிற்பேன்…!இயக்குனர் அமீர் அதிரடி
மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது .
இதில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் அமீர் கலந்து கொண்டார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், மக்கள்போராட்டங்கள் தொடர்பாக கருத்து கேட்க அழைத்திருந்தார் கமல்ஹாசன். நான் சந்தித்த தமிழக அரசியல் சூழல்,மக்கள் போராட்டங்கள் குறித்து கமலிடம் விளக்கினேன்.10 ஆண்டுகளாக சீமானுடன் இணைந்து பணியாற்றினேன், மக்களின் கருத்துக்களை அறியவும், ஆலோசனை வழங்கவும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தேன்.மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் நிற்பேன்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மக்கள் நீதிமய்யம் உறுதியாக உள்ளது.அதனை வரவேற்கிறேன் .இலங்கை பிரச்னை தீவிரமாக இருந்த நேரத்தில் திமுக நடத்தியமனித சங்கிலி போராட்டத்திலும் கலந்துகொண்டேன்.அதேபோல் ரஜினி அழைத்தால் செல்வீர்களா? என்ற கேள்விக்கு நல்ல விஷயத்திற்கு யார் அழைத்தாலும் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.