மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் – நேத்ரா

Default Image

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்.

உலகம் முழுவதும் வறுமையே இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை என்று மதுரை சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று கூறியுள்ளார். ஐ.நா.மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தது பற்றி மதுரை மாணவி நேத்ரா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இதனை தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசியுள்ளார். ஏனென்றால், மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார். 

பிரதமர் மோடி இவரை பாராட்டி பேசிய நிலையில், இவருக்கு மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது. இந்நிலையில், தற்போது, மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை அறிவித்ததுள்ளது. மேலும், இவருக்கு, ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்