அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவி தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். இந்நிலையில், ராஜ்பவனில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர், ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன். அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது அதற்கேற்ப செயல்படுவேன்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது அவசியம். அரசாங்கத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன் என தெரிவித்தார். தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. புதிய ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…