அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Default Image

அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவி தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். இந்நிலையில், ராஜ்பவனில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன். அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது அதற்கேற்ப செயல்படுவேன்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது அவசியம். அரசாங்கத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன் என தெரிவித்தார். தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. புதிய ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு  காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்