சலிப்பு ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகிவிடுவேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என்று ஆளுநர் பேச்சு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அந்த வகையில்,இன்று மண்டபத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகபடுத்த மாணவர்கள் யோகாசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என்றும் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேசியுள்ளார்.