அமைச்சரின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் – செந்தில் பாலாஜி..!
ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் அமைச்சர் 12 நிறுவனங்களை நடத்தி அதில் வருமானம் வந்ததாக கூறுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்று அமைச்சர் கூற முடியுமா..? அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று செந்திபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானத்தை விட பல நுறு கோடி ரூபாய் அமைச்சர் சொத்துசேர்த்துள்ளார் என செந்திபாலாஜி தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் செந்திபாலாஜி திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.