டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்ற முதல்வரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என டிஆர்.பி ராஜா பேட்டி.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராக பொறுப்பேற்றபின் தலைமைச்செயலகத்தில் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லாருக்கும் எல்லாம் என்கின்ற நோக்கத்துடன், தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் 1 மாநிலமாக அமைத்திட எல்லா விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர் பொறுப்பேற்றதிலிருந்து டெல்டாவில் எந்த பாதிப்பும் இல்லை; டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்; முதலமைச்சர் வழிகாட்டுதலில் எந்தவொரு பணியாக இருந்தாலும் திறம்பட செயல்படுவேன் தெரிவித்துள்ளார்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…