பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பேன்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பிறந்து வளர்ந்த ஊரான திருவாரூரில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்த நிலையில், அவரது பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த பின் அவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்ற நிதிஷ் குமார் தயாராகி வருகிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23ல் நடைபெறும் ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.